பழமையான எண் வடிவ யந்திரம்

300 ஆண்டுகள் பழமையான 
எண் வடிவ யந்திரம்



அன்மையில் பழனி, திருஆவினங்குடி திருக்கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள சாந்தகுல சவுமிய நாராயண கவரய நாயக்கமார் மண்டபத்திலுள்ள யந்திரம் ஒன்றைப் பற்றி அம்மண்டப நிர்வாகி பாலகிருட்டிணன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி, பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி பேராசியர்கள் அசோகன், கோபால கிருட்டிணன், தபதி கார்த்திக் ஆகியோரால் 300 ஆண்டுகளுக்கு பழமையான எண் வடிவ யந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட செய்தி தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது. 

தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தியின் தன்னலமற்ற சேவையும் இத்தகைய அரிய செய்திகளை தினமலர் நாளிதழ் தொடர்ந்து வெளிடுவதும் பாராட்டுதலுக்குரிய செயல்களாகும். 

வெளி எனும் பிரபஞ்சத்தைக் குறிக்கும் சதுர வடிவில், சிற்பக்கலையில் ஒன்பது கட்டங்கள் கொண்ட பீதா எனும் வரைப்படத்தில் வித்தை எனும் அறிவைக் குறிக்கும் வகையில் பூமியின் திசைகளான வடக்கில் எண் 7, கிழக்கில் எண் 1, தெற்கில் எண் 3, மேற்கில் எண் 9 எனவும் சோதிகளின் திசைகளாள நீரைக் குறிக்கும் வடகிழக்கில் எண் 6, நெருப்பைக் குறிக்கும் தென்கிழக்கில் எண் 8, பூமியைக் குறிக்கும் தென்மேற்கில் எண் 4, காற்றைக் குறிக்கும் வடமேற்கில் எண் 2, ஆகாயத்தைக் குறிக்கும் மையத்தில் எண் 5 என பொரிக்கப்பட்டுள்ளன.     

1 முதல் 9 வரையிலான அந்த எண்கள் எண் வடிவ தமிழ் கிரந்த எழுத்துக்களாலும், பிற்காலக்கட்டத்தில் அனைவரும் அறியும் வகையில் சிறிய அளவிலான தற்கால எண்களாலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
மேற்கண்ட திகைளில் உள்ள எண்களை மையத்திலுள்ள எண் 5 சேர்த்து கூட்டினால் வரும் கூட்டுத் தொகையான எண் 15 முறையே ஐந்து பூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்புக் காற்று, ஆகாயம் ஆகிய 5, ஞான இந்தியங்கள் எனப்படும் கண்(பார்த்தல்), காது (கேட்டல்), மூக்கு (நுகர்தல்), நாக்கு (சுவை அறிதல்), தோல் (ஸ்பரிசம்) ஆகிய 5, கர்ம இந்தியங்கள் எனப்படும கை (பிடித்தல்), கால் (நடத்தல்), வாய் (பேசுதல்), ஆசனவாய் (மலம் கழித்தல்), மர்ம ஸ்தானம் (இனவிருத்தி செய்தல்) என மூன்று ஐந்துக்களின் கூட்டுத் தொகையான எண்15-யைக் குறிக்கும் மனித உடலைக் குறிக்கும். 

ஆகாயத்தைக் குறிக்கும் மையக்கட்டத்தில் கிரகங்களில் அறிவுக்குரிய புதன் கிரகத்தைக் குறிக்கும் எண் 5 பொரிக்கப்பட்டுள்ளது. இம் மையம் யோக மையங்களில் இரு கண்கணின் புருவமத்தியிலுள்ள அறிவைக் குறிக்கும் அவிமுக்தம் எனும் ஆக்ஞா  சக்கரத்தைக் குறிப்பதாகும். 
15 என்பதிலுள்ள 1, 5 ஆகிய இரண்டின் கூட்டுத் தொகையான எண் 6 - இவ்வுலக வாழ்க்கையிலும், மரணத்திற்குப் பின் மேலுலகங்களிலும் நற்செயல்களின் கர்மத்தின் பயனாக ஏற்படும் இன்ப நுகர்வுகளான முறையே சமம், தமம், உபரதி, திதிசை,சை, சிரத்தை, சமாதானம் எனும் 6 ஞான செல்வங்களை குறிப்பதாகவும்,  யார் ஒருவர் இவ்வுண்மைகளை உள்ளது உள்ளபடியாக அறிகிறாறோ அவர் தான் தானாக நிற்கும் கைவல்ய முக்தி இன்பத்தை அனுபவிக்கிறார் என கைவல்ய நவநீதம், கைவல்யோ உபதேசம் ஆகிய நூல்களில் கூறுகின்றன.

இத்தகைய அரிய வடிவங்களை கண்டுப்பிடிப்பதும், அறிந்தவற்றை தமிழ் கூறும் நல்லுலக்கு அறிவிப்பதும் அனைத்து தமிழர்களின் கடமையாகும்.  

சுபாஷ்  archaeosymbolist@gmail.com

ரங்கன் panduranganm16@gmail.com

கருத்துகள்